வியாழன், 28 மார்ச், 2013

நீரிழிவை விரட்டும் நாவல்

 
சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.
...

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது? கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள "ஜம்புலின்' என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு ஸ்பூன்) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

பப்பாளி

நரம்புத் தளர்ச்சி குறைய...

பப்பாளிக்காய் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்...
பைன் என்சைம்.

யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க

விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

களாக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த

மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,

பித்தத்தை கட்டுப்படுத்தும்.

நெல்லிக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம்,

பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட்

யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.

பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை

பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும்

சுக்கு மருத்துவ குணங்கள்..!

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
...
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!


 கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா? பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது. சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்


புற்றுநோய்
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

கண்கள்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

கொலஸ்ட்ரால்
மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு
மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

முகப்பரு
மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

பாலுணர்வு
பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு
சக்தி மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

ஆரோக்கிய இதயம்
மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

 
இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள...் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?!

தேமல் மறைய...!

தேமல் மறைய....

மலச்சிக்கல்: செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி: மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
...

பித்த வெடிப்பு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு: சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்: வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்: கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்: வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு: ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்: எலுமிச்சம் பழசாறு(Lemon Juice), தேன்(Honey) கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
மேலும் பார்க்க

சனி, 16 மார்ச், 2013

முட்டைகோசின்.பலன்கள்:

கீரை வகையைச் சேர்ந்தமுட்டைக் கோஸில் வைட்டமின் ஏ, இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் புரதம், தாது உப்புக்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.

முட்டைகோசின் ...
பலன்கள்:

1. உடலுக்கு ஊட்டம் தரும்
2. உடல் வளர்ச்சி மிகவும் சிறந்தது
3. பார்வைக் கோளாறுகளை போக்கும். கண் நரம்புகளைச் சீராக இயங்கச் செய்யும்.
4. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
5. சரும வறட்சியை நீக்கும். சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.
6. வியர்வைப்பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
7. எலும்புகளுக்கு வலிமை தரும்.
8. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடு செய்யும்.
9. நரம்பு தளர்ச்சியை போக்கும்.
10. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
12. உடல் உஷ்ணத்தை தணிக்கும்
13. மலச்சிக்கலைப் போக்கும்.
14. குடல் சளியைப் போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
15. சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் பல் உறுதியாகும்.

சத்துக்காய்கள்...!

சத்துக்காய்கள்

பீட்ரூட் : கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தசோகையை சரிப்படு த்தும்.

பாகற்காய் : வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. பசியைத்தூண்டும். சர்க்கரை நோயின் கடுமையைக் குறைக்கும்.
...

முருங்கைக்காய் : வைட்டமின் ஏ, பி, சி பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண் டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.

சுண்டைக்காய் : புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. வயிற்றில் உள்ள புழுக்கள் கொல்லப்படும்.

வெண்டைக்காய் : ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. நினைவாற்றலைப் பெருக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலை நீக்கும்.

கோவைக்காய் : வைட்டமின் ஏ, கால்சியம் ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூலநோய் போன்றவை நீங்கும்.

கேரட் : உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

சுரைக்காய் : புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் சோர்வை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தூண்டும்.

குடைமிளகாய் : வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து ஆகியன கணிசமாக உள்ளன. அஜீரணக்கோள £றை நீக்கி செரிமான சக்தியைத் தூண்டும்.

கொத்தவரங்காய் : இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்..!

குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்

கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் இவ்வுலகில் அதிகம் உள்ளது. இத்தகைய கட்டுக்கதைகளால் மக்கள் பலர் உண்மை எது, நன்மை எது என்று தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஒருவர் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று தண்ணீர். உணவு கூட இல்லாமல் உலகில் வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. இத்தகைய தண்ணீர் தாகத்தை மட்டும் தணிக்க பயன்படுவதில்லை. பொதுவாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அதிலும் ஒருநாளைக்கு அதிகப்படியான அளவில் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் வறட்சி நீங்கி, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் நன்கு பொலிவோடு இருக்கும் என்பதாலேயே. ஆனால் அத்தகைய தண்ணீரை குடிப்பதால் உண்டாகும் உண்மையான நன்மை என்னவென்று தெரியாமலேயே, பல கட்டுக்கதைகள் மூலம் நீரின் நன்மையை பலர் நம்பி வருகின்றன...
ர். இப்போது அந்த தண்ணீரை பற்றிய மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள் என்னவென்று பார்ப்போமா!!!

கட்டுக்கதை-1
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனை ஏற்படும் என்பது. ஆனால் இதனை எந்த ஒரு ஆய்வும் நிரூபிக்கவில்லை. உண்மையில், தண்ணீரைக் குடித்தால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிக்கலாம். எனவே இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள்.

கட்டுக்கதை-2
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைப்பது. மிகவும் பிரபலமான ஒன்று என்றால் இது தான். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கும், நீரைக் குடிப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மேலும் எந்த ஒரு நிரூபணமும் இல்லை. அதிலும் மருத்துவர்கள் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.

கட்டுக்கதை-3
உடலில் உள்ள டாக்ஸின்களை சிறுநீரகங்கள் நன்கு செயல்பட்டு வெளியேற்றிவிடும் என்று சொல்வது. உண்மையில் அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகத்தின் சீரான இயக்கமானது தடைபடும்.

கட்டுக்கதை-4
ஆரோக்கியமான சருமத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது. அனைவரும் நினைக்கும் ஒன்றில் இதுவும் ஒன்று. பொதுவாகவே உடலில் 60% தண்ணீர் இருப்பதால், இன்னும் அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும் தான். ஆனால் அது மட்டும் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளாது.

கட்டுக்கதை-5
உடற்பயிற்சி செய்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று நினைப்பது. இதற்கு காரணம், உடற்பயிற்சியின் போது உடலில் வறட்சி ஏற்படும் என்பதால் தான், தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்தால், உடலில் உள்ள அசுத்த நீர் தான் வெளியே வருமே தவிர, வறட்சி ஏற்படாது.

கட்டுக்கதை-6
தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சொல்வது. உண்மையில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடும். எனவே அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் தான் உடல் எடையானது குறைகிறது.

வாதுமை கொட்டை(walnut)

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!!!

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா!!
...

சுருக்கங்கள்
வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்றுநோய்கள்
சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி ..!
சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்
வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

ஆமணக்கு..!

ஆமணக்கு..!

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.
...

1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

 7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்.

திராட்சை-மருத்துவக் குணங்கள்.

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளு
க்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சை பழத்தின் சத்துக்கள்:

நீர் =85%
கொழுப்பு =7%
மாவுப்பொருள் =10%
புரதம் =0.8%
கால்சியம் =0.03%
பாஸ்பரஸ் =0.02%
இரும்புச்சத்து =0.04%
விட்டமின் A =15%
நியாசின் =0.3%

மருத்துவக் குணங்கள்:

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.

அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".

திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

* "ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது. ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!

உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது.

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.

பளிச் முகத்திற்கு

தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

வெண்மையான பற்கள்

திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது.

முகச்சுருக்கம் போக்கும்

திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.

குங்குமப் பூ சாப்பிட்டால்...!

குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாயிருக்கலாம் எனும் நம்பிக்கை பலரிடமுள்ளது. இது உண்மைதானா?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது.

குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.
...

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

வெள்ளி, 15 மார்ச், 2013

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ள

 

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு(வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ...

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 2 1/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8. பச்சைத் தேயிலை நீர் (கிரீன் டீ-Green Tea) இதயத்திற்கு நல்லது.

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால்- Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தை சரியாக கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரையை

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க...


உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.
மன அழுத்தம்
கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்
கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை
எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு
சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி
எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்
மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

நெய் கொண்ட எண்ணற்ற மருத்துவப் பயன்கள்



நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

கிவி பழத்தின் மருத்துவப் பண்புகள்(KIWI)


கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது ஆனால் என்ன கொஞ்சம் விலை தான் அதிகம் .நாம் அன்றாடம் வீண் செலவுகள் எவளவு செய்கிறோம் அதில் வீண் செலவுகளை கொஞ்சம் குறைத்து விட்டு இந்த மாதிரியான உடம்பிற்கு பயனளிக்க கூடிய அவற்றை சாபிட்டால் நம் உடல் நலத்திற்கு நல்லவைகையாக அமையும் .

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.

கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.

பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.

முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுக்கின்றது:

மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது.
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:
கிவி பழத்தில் ‘ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி:

ஏனென்றால், கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.

உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து!

உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.

உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்:

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
பெண்கள் எளிதாக கருவுறுதலுக்கான வாய்ப்பை அளிக்கின்றது:
விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு:
சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.

உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர்.

இத்தகைய கனியானதுஎவ்வகையான பருவங்களில் கிடைக்கின்றன?
இக்கனிக்கு சிறந்த பருவம் ஜூன் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை சிறந்த பருவமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய கனிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும்; வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்.

அண்மைக் காலங்களில் தங்க நிற கிவி பழம் என்ற புதிய வகை இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் சதைப் பகுதியானது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயராகும். இந்த வகையாவது, பச்சை வகையை விட அதிக சுவையாக இருக்கும்.

மேலை நாடுகளில் அண்மையில் கிவியில், சிவப்பு வகை என்ற கிவி பழம் விற்பனையில் உள்ளது. கிவி நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளன..

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்

மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்­ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலா

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்


 செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
...

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்:

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகையை கட்டுப்படுத்தும்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாலை நோய் குணமடையும்:

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உடல்புஷ்டிக்கு:

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பெண்கள் நோய் தீரும்:

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ­ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சு.......!



முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.

ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
...

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

ஆவி பிடிப்பதால் என்ன நன்மை?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

ஆவாரை


பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் தானே வளர்வது. இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையவை.

சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயற்படும்.
...

1. பூச்சூரணத்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.

2. ஆவாரையின் பஞ்சங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுவதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

3. ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பிராணி, நல்லெண்ணெயுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்.

4. 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

ஆரை

 செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த் தாவரம். கீரையாகச் சந்தையில் ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு. தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இலை மருத்துவப் பயனுடையது.

வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது.
...

1. கீரையைச் சமைத்துண்ணத் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.

2. கீரையைச் சமைத்துண்ணப் பகுமூத்திரம் போகும்.

3. இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

ஆனை நெருஞ்சில்

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள்நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. தமிழகம் முழுவதும் மணற்பாங்கான இடங்களில் தானே வளர்கிறது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப்பயனுடையவை. சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனைச்சிறிது சர்க்கரைச்
...
சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

2. 10 கிராம் இலைப்பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகி வர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

3. 50 கிராம் இலையை மென்மையாய் அரைத்துத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.

4. இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

5. 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மாலையாகச் சாப்பிட்டு வர நீர்ச்சுருக்கு தீரும். விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.

ஆல்

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.
...
1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு தீரும்.

2. ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி, காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.

3. ஆலம் பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.

4. ஆலம் பட்டை, ஆத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை வகைக்கு 40 கிராம், 10 கிராம் மிளகுடன் சிதைத்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 250 மி.லி. வீதம் தினம் 3 வேளை குடித்து வர பாதரசபாசாணங்களின் வேகம் குறையும்.

5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். 4 நாள்களுக்கு ஒரு முறை தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிட மதுமேகம் தீரும்.

6. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தியாகும்.

7. விழுது துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

8. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.

9. விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.

சனி, 9 மார்ச், 2013

எலுமிச்சை உடல்நல நன்மைகள்:-

... காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்

மைலாஞ்சி (Mylanchi)வாழைபழம் ...!

ஆரோக்கியம் தரும் வாழைபழம் ...!

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான்.

வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும்.வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் இன்ஷா அல்லாஹ் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):

புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

ஆப்பிளும்... ஆரோக்கியமும்..!

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும்.

இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.
...
இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.

வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

வெள்ளி, 8 மார்ச், 2013

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி:-

வேறு பெயர்: ஓம வள்ளி

தாவர பெயர் Coleus Aromaticus.
Karpooravalli in Tamil 
Pan-Ova in Marathi. 


வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் 
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட ,கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்
 வேறு பெயர்: ஓம வள்ளி

தாவர பெயர் Coleus Aromaticus.
Karpooravalli in Tamil
Pan-Ova in Marathi.

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட ,கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்

எலுமிச்சை பழத்தின் நன்மைகள்.............!!

எலுமிச்சை உடல்நல நன்மைகள்:-

... காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்

செவ்வாய், 5 மார்ச், 2013

கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி

...

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
...

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சேப்பகிழங்கு கீரை



சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.
சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள்,நார்சத்து மாவுச்சத்தும்,காணப்படுகின்றன.

...
சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

திங்கள், 4 மார்ச், 2013

தேனின் பலன்....!


 தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??

பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.

** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.

** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.

** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது:

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.
...
** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.

** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.

** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது:

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வருமாம்!!!


 உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சொல்ல முடியாத அளவில், உலகிலேயே அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம். சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!!

உண்மை - 1
"சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை - 2
"இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை - 3
"நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

உண்மை – 4
"நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உண்மை - 5
"நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,

உண்மை - 6
"என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.

உண்மை - 7
"குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை - 8
"குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.

உண்மை - 9
"கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்

உண்மை - 10
"நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.