திங்கள், 8 ஜூலை, 2013

ஆண்மை பெருக்கும், அதிக அமில சுரப்பை குறைக்கும் ரோஜா “குல்கந்து

ஆண்மை பெருக்கும், அதிக அமில சுரப்பை குறைக்கும்
 ”ரோஜா “குல்கந்து

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து செய்முறை

நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.

இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

ஜீரணக் கோளாறு நீங்கும்

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

ஆண்மை பெருக்கி

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

இதயத்திற்கு ஏற்றது

ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

குல்கந்தின் பயன்கள்
‌சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.

முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

ஆப்பிள் குல்கந்து மில்ஷேக்

தேவையான பொருட்கள்....

ஆப்பிள் - 1
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 3 1/2 கப்
சுகர் லைட் - 2 டேபிள்
ஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டைத்தூள் - 2 சிட்டிகை

செய்முறை....

• ஆப்பிளை துறுவி சிறிது சர்க்கரை சேர்த்த தண்ணீரில் போடவும். (நிறம் மாறாமல் இருக்கும்)

• பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதோடு மீதி உள்ள சர்க்கரை, குல்கந்து,தேன், பட்டைத்தூள் சேர்த்து அடித்தபின் குளிர்ந்த பால், ஐஸ் துண்டுகள் கலந்து மிக்ஸியில் ஓட விடவும்.

• விருப்பப்ட்டால் சிறிது கடைந்த பாலேடும் சேர்க்கலாம்

• உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

ட்ரைஃப்ரூட் குல்கந்து!

தேவையானவை:

ஆப்பிள் விழுது, கிர்ணிபழ விழுது, முலாம்பழ விழுது - தலா ஒரு கப் (ஆப்பிள், கிர்ணி பழம், முலாம்பழம் ஆகியவற்றைக் கழுவி, தோல் சீவி துண்டுகளாக்கி தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ரோஜாப்பூ - 3 பூக்கள், பாதாம் (தோல் நீக்கி சீவவும்), முந்திரி - தலா 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான தவா வில் ஆப்பிள் விழுது, கிர்ணி பழ விழுது, முலாம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அல்வா பதத்தில் கொதித்து வரும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பிறகு குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, கெட்டியான பதத்தில் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், சுத்தம் செய்து, உதிர்த்த ரோஜா இதழ்கள் சேர்த்து ஒருமுறை கிளறி மூடவும். ஆறியதும் சாப்பிட... சூப்பர் சுவையில் இருக்கும்!

குல்கந்து ரோஸ் குக்கி

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்
ரோஜா குல்கந்து - 4 தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
பால் - 50 மி.லி.,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மைதா, உப்பு, சீரகம், பால், ரோஜா குல்கந்து ஆகியவற்றை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில், எண்ணெயை ஊற்றி, காய வைக்கவும்.

காய்ந்த எண்ணெயில், குக்கி அச்சை நனைத்து, திரும்பவும் எண்ணெயில் முக்கவும். வெந்தவுடன் அச்சு தனியாக வந்து விடும்.

குல்கந்து ரோஸ் குக்கி, எண்ணெயில் தங்கி விடும்.

நன்றாக வெந்தவுடன், எடுத்து விடவும்.

குல்கந்து ரோஸ் குக்கி ரெடி.

குல்கந்து ரோஸ் குக்கியை, தேன், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி கொண்டும், தயார் செய்யலாம்.
 
 

புதன், 3 ஜூலை, 2013

மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்கை வைத்தியம்


*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
...
*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம்

வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இய‌ற்கை வைத்தியம்:-

1) செருப்புக்கடி புண்ணுக்கு

தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.

2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்

1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.

2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்

கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்

1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

6) உடன் தீப்பட்ட புண்ணுக்கு...

1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.

2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.

3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.

4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).

7) கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க

1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்

1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.

2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.

9) உள்நாக்கு வளர்ச்சிக்கு

வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்‍ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.

10) உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர

1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.

11) கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக

1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.

12) பேன், பொடுகு, தலை ஊரல் தீர

1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.

2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.

13 ) அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக

மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.
18 மணி நேரம் முன