வியாழன், 28 பிப்ரவரி, 2013

நாட்டு மருந்துகளும், நோய் நிவாரணமும்.............!!



1) அகத்தி - வலி, கபம், சோகை, குன்மம்

...
2) அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

3) அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி

4) அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்

5) ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

6) ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்

7) இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

8) எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்

9) ஓமம் - கண்நோய், கபம், விக்கல்

10) கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

11) கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

12) கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

13) கருவேப்பிலை - இரத்த பித்தம்

14) கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

15) கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்

16) குங்குலியம் - பாண்டு நோய், காதுவலி

17) கொடிவேலி - கிரஹணி, வீக்கம்

18) கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

19) சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்

20) சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

21) தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.

22) திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

23) தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்

24) நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

25) நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

26) நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

27) நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு

28) பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்

29) பூண்டு - இதய நோய், இருமல்

30) பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்

31) பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்

32) பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி

33) மணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்

34) மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி

35) முள்ளங்கி - காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்

36) வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

37) வல்லாரை - சோகை, நீரழிவு, வீக்கம்

38) வாகை - வீக்கம், அக்கி, இருமல்

39) வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

40) வில்வம் - வாதம், கபம்

41) விளாமிச்சம் வேர் - நாவறட்சி, எரிச்சல்

42) வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு

43) ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்

புதன், 27 பிப்ரவரி, 2013

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

நிறைய பேருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை, அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், ஆல்கஹால் அருந்துவது போன்றவை. மேலும் ஒரு சில சத்துக்கள் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும். சிலர் தலைவலி வந்தால், உடனே மாத்திரைகளை போடுவார்கள். அவ்வாறு எப்போது தலை வலி வந்தாலும், மாத்திரைகளைப் போடும் பழக்கத்தை கொண்டால், பின் அது பழக்கமாகி, உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே அவ்வாறு மாத்திரைகளை போட்டு, தலைவலியை குணமாக்குவதை விட, அவற்றை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, தலைவலியை சரிசெய்யும் ஆரோக்கியமான உணவுகளை மேற்கொண்டு வந்தால், தலை வலியை குணமாக்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, இந்த ஆரோக்கியமான உணவுகள் என்னவென்று பார்த்து, அதனை சாப்பிட்டு தலை வலியை சரிசெய்யலாமா!!!

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாப்பிட்டால், தலை வலியை சரிசெய்யலாம். அதிலும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தலைவலியை குணமாக்கும். பொதுவாக ஆல்கஹால் அருந்தினால், சிறுநீர் அடிக்கடி வரும், இதனால் உடலில் வறட்சி ஏற்பட்டு, உடலுக்கு அவசியமான சத்தான பொட்டாசியம் வெளியேறிவிடும். இத்தகைய பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. எனவே தலை வலி இருக்கும் போது, உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், வாழைப்பழத்தை விட அதிகப்படியான பொட்டாசியத்தை பெறலாம்.

தர்பூசணி
உடலில் வறட்சியினால் தலை வலி வரும். எனவே தலை வலியின் போது மாத்திரைகளை சாப்பிடுவதை விட, நீர்சசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம். அதிலும் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது. மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், தலைவலியை குறைக்கலாம்.

காபி
ஆம், தலை வலியின் போது காபி குடித்தால், தலை வலி போய்விடும். ஏனெனில் தலைவலிக்கும் போது உட்கொள்ளும் மாத்திரைகளில் காப்ஃபைன் இருப்பதால் தான் தலைவலி குணமாகிறது. ஆகவே தலை வலிக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள காபியை குடித்தால், தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் ஒரு கப் குடிப்பது போதுமானது.

கோதுமை பிரட்
கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும், தலை வலி உண்டாகும். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். அதற்கு போதுமை பிரட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் நன்கு இருக்கும்.

பாதாம்
நிறைய ஆய்வுகளில் பாதாமில் இருக்கும் மக்னீசியமானது தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும் என்று சொல்கிறது. எனவே ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள், மக்னீசியம் உணவுகளை சாப்பிட்டால், நல்லது. அதற்கு பாதாம், வாழைப்பழம், அவகேடோ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

காரமான உணவுகள்
தலைவலியின் போது கார உணவுகளை சாப்பிட்டால், தலை வலியானது சீக்கிரம் பறந்து போய்விடும்.

தயிர்
தலை வலியின் போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் தலை வலி குணமாவதோடு, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.

எள்
எள்ளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலை வலியும் போய்விடும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இவற்றில் மக்னீசியமும் அதிகம் உள்ளது.

பசலைக் கீரை
பசலைக் கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, தலைவலியையும் குறைக்கும். எனவே தலை வலிப்பது போல் இருந்தால், அந்த நேரம் சாலட் செய்து, அதில் லெட்யூஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக பசலைக் கீரையைப் பயன்படுத்தலாம். இதனால் தலை வலியைக் குறைக்கலாம்.
 

எலுமிச்சை

கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்

நீர்ச்சத்து - 50 கிராம்

கொழுப்பு - 1.0 கிராம்

புரதம் - 1.4 கிராம்

மாவுப்பொருள் - 11.0 கிராம்

தாதுப்பொருள் - 0.8 கிராம்

நார்ச்சத்து - 1.2 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.

பாஸ்பரஸ் - 0.20 மி.கி.

இரும்புச் சத்து - 0.4 மி.கி.

கரோட்டின் - 12.மி.கி.

தையாமின் - 0.2 மி.கி.

நியாசின் - 0.1 மி.கி.

வைட்டமின் ஏ - 1.8 மி.கி.

வைட்டமின் பி - 1.5 மி.கி.

வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்

வயிறு பொருமலுக்கு

சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

தாகத்தைத் தணிக்க

தற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

இரத்தக் கட்டுக்கு

உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க

சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

பித்தம் குறைய

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.

நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.

· உடல் நமைச்சலைப் போக்கும்

·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
...

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

வாழை இலை


 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

...
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

பூண்டு...SPECIAL...!


 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்-புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

...
பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.
றீ பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்-கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

முழங்கால்...CARE....!

 உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.
...

இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்….

* எலுமிச்சை சாற்றை முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.

* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.

* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.

* பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.

* கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.

* பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.

* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.

* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.

ஆகவே மேற்கூறிய சிலவற்றையெல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வெள்ளையாக வைத்துக் கொள்ளுங்கள்

நரம்பு தளர்ச்சி&ஆண்மை ...பெருக்கம்


 இளைஞர்கள் புகைப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் தவறான உணவு முறையால் மனஅழுத்தம், உடல் உஷ்ணம், வாயுத்தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி பாலியல் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள். கிராமவாசி, உழைப்பாளிகள் ஆகியோர் நிறைய குழந்தைகள் பெறுகிறார்கள்.

ஆனால் நகரவாசிகள் பலர் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார் மகாலிங்கபுரம் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ். புகைப்பழக்கமானது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பாலியல் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. மதுப்பழக்கத்தால் பாலுணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் இளைஞர்களிடம் உள்ளது அது தவறு. மதுவால் வெறிதான் ஏற்படும்.

மதுப்பழக்கத்தால் மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்களுக்கு பாலியல் குறைபாடு உண்டாகும். உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் உண்டு. உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாகும்.

தவறான உணவு பழக்கத்தால் ஏற்படும் வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும். உடல் சூடு அதிகரிக்க காரணம் வாய்வுத் தொல்லை, வாய்வுத்தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரணம்.

எனவே ஜீரணக்கோளாறுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பருவகால மாற்றங்களால் ஏற்படும் உஷ்ணம் வேறு வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு, சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் குறைபாடுகள் ஏற்படும். உடல் உஷ்ணம் அதிகரித்தால், சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும்.

இதைத்தான் ஆண்மைக்குறைவு என்கிறோம். விந்துவின் `பலமும்' குறையும், விந்துவின் உயரணுக்களின் எண்ணிக்கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்து விடும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும். பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சூழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும்.

தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும். இந்த உடல் உஷ்ண பாதிப்புகள் குறித்து ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது . நோயாளிகளில் பலருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும் மருந்துகளும், நோயாளிகளின் மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டன, இதனால் பாலியல் குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது.

நரம்பு தளர்ச்சி நோயாளிகளிடம் வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை நாம் பார்க்க முடியும். படபடப்புடன் காணப்படுவார்கள். உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளிவாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாகத் தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.

பாலுணர்வு பற்றி இளம் வயதில் தெரிந்து கொள்ளும் தவறான போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால்தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும் பாலியல் குறைபாடக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடுகளில் ஏற்படும் சண்டைகள், பொற்றோர்கள், உடன் பிறந்தோர் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ்மனதை பாதித்துவிடுவதும் நரம்புத்தளர்ச்சிக்கான காரணமாகும். கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னை அறியாமல் குழப்பமடைவதாலும், பல்வேறு பரபரப்புகளும்- படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும், அசதியுடனும் காணப்படுவர்.

சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும். திருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் அவர்களுக்கும் இத்தகைய குறைபாடுகள் தோன்றுகின்றன.

மேலும் உளவியல் பாதிப்பும் நரம்பு தளர்ச்சிக்கு காரணம். ஒரு சிலருக்கு மட்டுமே உண்மையான பாதிப்புகள் இருக்கின்றன. இவர்கள் எந்த மருந்து சாப்பிட்டாலும் பயம் காரணமாக குணமாவதில்லை. கவுன்சிலிங் மூலம்தான் இவர்களை குணப்படுத்த முடியும். நரம்பு தளர்ச்சிக்கு தவறான உணவு பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுவது, இரவில் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளுதல் போன்றவை காரணம். மனதில் அமைதி இன்மை, விஷக்காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடி நோய்களால் பாதிக்கப்பட்டு பக்க விளைவுகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி ஏற்படலாம்.

இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இது ஒரு குறைபாடுதான். நோய் அல்ல, ஆகவே இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே இருளாகிவிட்டது என்ற தவறாகப் புலம்பக்கூடாது.

குடிப்பழக்கம் இருந்தால் அதனை கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீரில் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை எனறு இருக்காமல் குடும்பத்தாருடன் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம் இந்த குறையை போக்க முடியும். தவறான சிகிச்சைகள், லேகியங்கள் ஆகியவை பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். நரம்பு தளர்ச்சி, பாலியல் குறைபாடை போக்க இயற்கையான மூலிகைகளை கொண்டு ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற்றால் புரண குணம் அடையலாம்.

ஆயுர்வேத சிகிச்சைக்கு பத்தியம் இல்லை. பக்க விளைவுகள் கிடையாது. ஒவ்வொருவரின் உடல் தன்மை, நோய் பாதிப்பு குறித்து முழு ஆய்வு செய்த பின்பே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நரம்பு தளர்ச்சி பாலியல் குறைபாடுகளை முற்றிலும் களையலாம் என்கிறார் மகாலிங்கபுரம் அப்பல்லோ ஆயுர்வேத மைய நிபுணர் டாக்டர் மகேஸ்வரராவ்.

ஜாதிக்காய்......

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ.......

* மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

* தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

* மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

* மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

முருங்கையின் மகத்துவம்.......

* பாலியல் குறைபாடு தொடர்பான மருத்துவத்தில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

* முருங்கைப்பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை பூ சிறுநீர்ப் போக்கிகளை தூண்டு பவை, பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும். முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நரம்புகள் பலப்படும். உடல் வலுப்பெறும் உடல் சூடு தணியும்.

இதை இயற்கையின் வயாகரா என்று கூறலாம். முருங்கை கீரை, முருங்கை பூ இரண்டையும் சம அளவில் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை தன்மை அதிரிக்கும். கீரையும், பூவையும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

மாதவிடாய்....!



* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
...

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இரத்த மூலத்தை சரியாக்கும் கீரைகள்


முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எ...டுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், சுடினால் ஏற்படும் கட்டி, இரத்த மூலம் போன்றவை எளிதில் சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு போன்றவை தீரும்.

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும். முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.

அகத்திக்கீரையை சாறாக எடுத்து சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச்சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.

கானாம்வாழைக் கீரையையும் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் எளிதில் குணமாகும். துத்திக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், மூல நோயில் உண்டாகும் பௌத்திரக் கட்டி குணமாகும்.

புளியாரைக் கீரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சுக்காங் கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள், குடற்புண்கள் குணமாகும்.

சுக்காங் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே தீரும். பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே குணமாகும்.

பாற்சொரிக் கீரைச், துத்திக்கீரை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும். பாற்சொரிக் கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது.

காரணம் :
...

குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம்.

அறிகுறிகள் :

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள் :

பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1) எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2) நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3) கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4) குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

செய்ய வேண்டியவை :

1) விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2) 2, 3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்) மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :

1) புகை மற்றும் மது.
2) வெயிலில் அலைவது.
3) காரமான உணவு வகைகள்.
4) வயிறு முட்ட சாப்பிடுதல்.
5) தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.

பொடுகு தொல்லை நீங்க சில குறிப்புகள் !!!!

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

வாய் துர்நாற்றத்தை போக்க

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.

சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித் துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

தயிர்

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்..!!

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான்... இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!
...

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் ளாக்டோ இருக்கிறது.
தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்...!

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்


இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

...
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால்வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2,கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும்.‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும்காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தும்பைப் பூ


 தும்பைப் பூ
...
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

அத்திக்காய்

அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல, ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.

அக்கரகாரம்

மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும்.

மிளகு

இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும்.