ஞாயிறு, 30 ஜூன், 2013

முட்டை சாப்பிட்டால் மார்பகப்புற்றுநோய் வராதாம்: ஆய்வில் தகவல்....
தினசரி ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
முட்டையானது அதிக சத்து நிறைந்த உணவு. இதற்கு அதிகம் செலவு செய்ய தேவையில்லை. தினசரி இரண்டு முட்டை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வருவதற்காக வாய்ப்புகள் 24 சதவீதம் குறையும் என ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானவை மா...ர்பகப்புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப்புற்றுநோய் பற்றிய அச்சமின்றி வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் இது தொடர்பாக 3 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: நமது உடலில் உள்ள செல்கள் சரியாக வேலை செய்வதற்கு சோலைன் என்ற புரதம் தேவைப்படுகிறது. ஒரு முட்டையில் 125.5 மில்லி கிராம் சோலைன் உள்ளது. ஆண்கள், பெண்கள், வயது என்ற வித்தியாசமெல்லாம் இல்லாமல் அனைவருக்குமே இந்த சோலைன் தேவைப்படுகிறது. முக்கியமாக பெண்களுக்கு தாய்மை அடையும் பருவத்தில் இது அதிகமாக தேவைப்படுகிறது.
ஒரு நாளைக்கு நமக்கு 455 மில்லி கிராம் சோலைன் தேவைப்படுவதாகவும், காபி, முட்டை, பால் ஆகியவற்றை உட்கொள்ளும் போது இவை உற்பத்தியாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் இந்த சோலைன் குறையும்போது, மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. முட்டை உட்கொள்ளும்போது சோலைன் சுரப்பதால் மார்பக புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz
மேலும் பார்க்க

  • 2 நபர்கள் இதை விரும்புகிறார்கள்

Aatika Ashreen
நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!!
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கு...ம். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.
சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.
Read more at: http://tamil.boldsky.com/health/diabetes/2013/vegetables-that-diabetics-should-avoid-003506.html
மேலும் பார்க்க
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின்...
tamil.boldsky.com
அரசியல் கலாட்டா
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!!
...தொடர்ந்து படிக்கவும்
Aatika Ashreen
எக்ஸ்ட்ரா டிப்ஸ்....
* காற்றோட்டமில்லாத அறைகளில் அதிக நேரம் இருந்தாலோ அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருந்தாலோ சிறுநீரகக் கோளாறு வரலாம்.
* ஊறுகாய், கருவாடு, வடாம் ஆகியவற்றை அடிக்கடியோ அதிகமாகவோ சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.
* சிறுநீரகச் செயலிழப்பு இருப்பவர்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. மீறினால் நீர்ச்சத்து அதிகமாகி, மூச்சு வாங்குதல், உடல் வீக்கம் போன்றவை நிகழலாம். அதே நேரம் நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அந்த நீரைக் குடிக்கலாம்.
...
* தேவையில்லாத பயம், மனத்தளர்ச்சி போன்றவையும் சிறுநீரக சக்தி குறைவதன் அடையாளமே!
மேலும் பார்க்க
உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...
...
இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,
உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..
"" இன்றைய சிந்தனை ""
மற்றவர்களும் நம்மைப்போலவே..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.
அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.
கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.
அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,
கரு,கருவென்று இருந்தார்.
வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,
''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.
என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.
பெட்டகக் காப்பாளர் சொன்னார்,
பரவாயில்லை,கொடுங்கள்.
நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று,
உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,
சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,
அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.
உலக இயல்பு...
..........................
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.
நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.
எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்
நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
வந்துவிடும்.
மேலும் பார்க்க
  • Ganesh Prabu இதை விரும்புகிறார்.