உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர்
பையில்,சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது
சகஜம்.
‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலிசிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும்.
சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன.

சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம்,
ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரியா போன்ற உப்புகள் அதிக
அளவு தேங்கிவிடும்போது அவை கற்களாக மாறி, சிறுநீரகத்தில் சேர்ந்து விடுகின்றன. ஒரு
சில நேரங்களில் சிறுநீடன் ரத்தம் கலந்து வருவதற்கு இந்த கற்களே காரணமாகும்.
சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத்
தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர்
அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட,
கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால்
பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல்
உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா
சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற
பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற
பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி.,
என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும்
பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான
சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர்
தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி
விடும்
நிறைய தண்ணீர் குடித்தாலே சிறுநீரக கல் சிறுநீருடன்
சேர்ந்து வெளியேறி விடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற
வேண்டியிருக்கும். அறுவை இல்லாத நவீன சிகிச்சையும் உண்டு.
சிறுநீர் மூலம் வெளியேற வேண்டிய உப்புக்கள் அளவுக்கு
அதிகமாகி விடும்போது வெளியேறத் தடை ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும்
இணைப்புக் குழாய்களில் அந்த உப்புக்கள் படிகம் போல் படிந்து, சிறுகச் சிறுக
சேர்ந்து கல் போல மாறிவிடும்.
நெய், வெண்ணை, தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை,
பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள்
தோன்றலாம்.
ஆண்களுக்கு சிறுநீர்ப்பையில் இருக்கும் புராஸ்டேட்
சுரப்பி வயதான காலத்தில் வீங்கி விடும். சிலருக்கு சிறுநீர் இணைப்புக்குழாய்களில்
சுருக்கம் உண்டாகும். இதனால் சிறுநீர் வெளியேற முடியாமல், சிறுநீரகத்திலும்,
சிறுநீர் பையிலும் தேங்கி கற்கள் உண்டாகி விடும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும்
நோய்த்தொற்றும் கற்கள் உண்டாக காரணமாகும்.
* வயிற்றுவலி, இடுப்புவலி, சிறுநீரில் ரத்தம் கலந்து
போதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிலநேரங்களில் குளிர் காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாகும்.
* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் பக்க முதுகில்
விலா எலும்புகளுக்குக் கீழ், திடீரென கடுமையான வலி உண்டாகி முன்வயிற்றுக்குப்
பரவும்.
* சிறுநீர்ப்பை இணைப்புக் குழாய்களில் கல் இருந்தால்
அடிவயிற்றில் வலி தோன்றி பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல்
இருந்தால் தொப்புளுக்கு கீழே வலி தொடங்கி சிறுநீர்ப்புற நுனிவரை பரவும்.
* சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல்,
அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வும் இருக்கும்.
சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க டிப்ஸ்...
* ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க
வேண்டும். கோடை காலத்தில் இளநீர், மோர் அதிகமாக குடிக்கலாம்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது, உடற்பயிற்சி
செய்யுங்கள். அதன் மூலம் ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு
சென்றடையும்.
* பால், வெண்ணை, பூண்டு, கருணைக்கிழங்கு, பசலைக்
கீரை, முள்ளங்கி போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
* உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தில் கால்சியத்தின்
கடுமை குறையும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிராமிற்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது.
பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிப்ஸ் வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும்.
* மக்னீசிய சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது.
வைட்டமின் பி6 சிறுநீரில் உள்ள கற்களைக் குறைக்க உதவும்.
* நார்ச்சத்து மிகுந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.
* காபி, டீ மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத்
தவிர்ப்பது நல்லது.
* பிறப்புறுப்பில் வலி, கீழ்முதுகில் வலி, விதைகளில்
வலி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக