செவ்வாய், 18 நவம்பர், 2014

உடல்நலம் டிப்ஸ்..!


உடல்உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.நலக் குறிப்புகள்

* கையில் மருதாணி நிலைத்து நிற்க...

மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.

* முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும்.

* உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.

* உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும்.

மருத்துவக் குறிப்புகள்

* எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.

* சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

* தினசரி உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தினமும் பச்சை வெங்காயத்தை கொடுத்து வந்தால் ஜலதோஷம், காய்ச்சல் வராது.
மங்கு:

சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப்படையும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டாகும். இந்த மங்கு தோன்றினால் முக அழகு மாறிவிடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து விடுவார்கள். இப்பிரச்சினை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை...

கோக்டம் - 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு - முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)

சருமம் பளபளக்க:

பச்சைப் பயறு - 250 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
வசம்பு - 10 கிராம்

எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

அழகைத் தக்க வைக்க:

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும். 

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக