வெள்ளி, 21 நவம்பர், 2014

சிறு நீரக கல்லுக்கு சிறந்த வைத்தியம்

சிறு நீரகக்கல்லை அகற்றும் ஃபிரஞ்சு பீன்ஸ்..!20 ரூபாயில் மிகச்சிறந்த  நிவாரணம்.!

பிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

செவ்வாய், 18 நவம்பர், 2014

உடல்நலம் டிப்ஸ்..!


உடல்உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.நலக் குறிப்புகள்

* கையில் மருதாணி நிலைத்து நிற்க...

மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.

* முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும்.

* உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.

* உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும்.

மருத்துவக் குறிப்புகள்

* எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.

* சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

* தினசரி உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தினமும் பச்சை வெங்காயத்தை கொடுத்து வந்தால் ஜலதோஷம், காய்ச்சல் வராது.
மங்கு:

சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப்படையும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டாகும். இந்த மங்கு தோன்றினால் முக அழகு மாறிவிடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து விடுவார்கள். இப்பிரச்சினை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை...

கோக்டம் - 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு - முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)

சருமம் பளபளக்க:

பச்சைப் பயறு - 250 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
வசம்பு - 10 கிராம்

எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

அழகைத் தக்க வைக்க:

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும். 

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

வியாழன், 13 நவம்பர், 2014

மகிழம்பூ

கிழம்பூ... பேரைக் கேட்டாலே மனம் மலரும். மகிழ்ச்சியை மடை திறந்த வெள்ளமாகத் தருவதில் மகிழம்பூவுக்கு ஈடு இணையே இல்லை. வாடிப் போனாலும், வற்றாத வாசனையை வாரி வழங்கும் வள்ளலான மகிழம்பூவை தலையில் சூடும் போது கிடைக்கும் அழகைவிட, மூலிகையாக பயன்படுத்தினால் கிடைக்கும் அழகு... அளவில்லாதது. இளம்பெண்களின் சருமப் பிரச்னைகளை சடுதியில் போக்கிடும் அற்புத வித்தையும் இந்த மலரிடம் ஒளிந்து கிடக்கிறது. அதிலிருந்து சிலவற்றை நாம் அள்ளிக் கொள்வோமா...?
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவுடன், அரை கப் குளிர்ந்த ரோஸ் வாட்டரை (ரோஜா பூக்களைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்தும் சேர்க்கலாம்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் 'பேக்' போடுங்கள். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, பளபளக்கும்.
மகிழம்பூ பவுடர் (பூக்களை காய வைத்து அரைத்தது) - ஒரு டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இரண்டையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். அதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வர, அன்று பூத்த மலராக முகம் பளீரென்று இருக்கும்.மணப்பெண்ணுக்கு ஏற்ற அழகு சிகிச்சைகள்...உடல்: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு, நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டுங்கள். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து குளியுங்கள். அரோமா தெரபி செய்து கொண்டதுபோல் உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வாசனையோடு கூடிய பளபளப்பு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்.தலை: கால் கிலோ நல்லெண்ணெயுடன் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இதனுடன், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தலா 25 கிராம் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளியுங்கள். கண்டிஷனர் போட்டதுபோல் கூந்தல் மென்மையாகவும் வாசனையாகவும் இருக்கும். ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். மேலே உடல் மற்றும் தலைக்கு குறிப்பிட்டுள்ள தைலங்களை தேய்த்துக் குளித்தபிறகு, மகிழம்பூ போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் உடல் மற்றும் தலையை அலசுங்கள். புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் குடிகொள்வதோடு அற்புதமான அழகும் சேர்ந்துகொள்ளும்.தோல்: ஃப்ரெஷ் மகிழம்பூவை ஊற வைத்து அரைத்த விழுதுடன், அதே அளவு பயத்தம்பருப்பு மாவைக் கலந்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். திட்டுக்கள், கருமை, வியர்வை நாற்றம் அத்தனையும் காணாமல் போய் தோல் பளபளவென மின்னும்.உலர்ந்த மகிழம்பூ, மரிக்கொழுந்து, பூலான்கிழங்கு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதெல்லாம் இந்தப் பவுடரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளியுங்கள். மாசு, மரு இல்லாத வாசனையுடன் கூடிய அழகு ஜொலிக்கும். தோலில் வறட்சி தலையில் செதில் போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கவும் மகிழம்பூ உதவுகிறது.100 கிராம் வெந்தயத்தூளுடன், மகிழம்பூ பவுடர்(பூக்களை காய வைத்து அரைத்தது), புங்கங்காய்தூள், கடலை மாவு இவை தலா 50 கிராம் சேர்த்து கலப்பு பவுடர் தயாரித்துக் கொள்ளுங்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கும்போது இந்தப் பவுடரில் சிறிது எடுத்து உச்சி முதல் பாதம் வரை தேய்த்து அலசுங்கள். செதில் பொடுகு, தொல்லை நீங்கி கூந்தல் நல்ல கண்டிஷனில் இருக்கும். தோலும் பளபளக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவுக்குப் பதிலாக பயத்தம்பருப்பு மாவைக் கலந்து கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கலப்பு பவுடருடன், வெள்ளரி விதை பவுடர், கஸ்தூரி மஞ்சள்தூள் இரண்டும் தலா 50 கிராம் கலந்து குளித்தால் சருமம் நல்ல நிறத்தோடு மின்னும். 

மகிழம்பூவைத் தலையில் சூடிக் கொள்வதால் உடல் சூடு தணிந்து மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
இந்தப் பூவை தினமும் முகர்வதால் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளால் மன நிம்மதியில்லாமல் தவிப்பவர்களின் மூளை எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், மகிழம்பூவில் தயாரிக்கப்படும் தைலத்தை தலையில் தடவி வந்தால்... மூளை குளிர்ச்சியாகி மன நிம்மதி கிடைப்பதோடு, தெளிவும் கூடும்.
மகிழம்பூவில் பூச்சிகள் இருக்கும். இந்தப் பூவை நன்றாகச் சுத்தப்படுத்தி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடியுங்கள். ஒரு மண்டலம் குடித்து வந்தால் உடலில் சதை பிடிக்கும். 
ஒரு கைப்பிடி மகிழம்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறியதும் காலை மாலை இருவேளையும் குடித்து வர, உடல் உஷ்ணம் குறையும். 
மகிழம்பூவை சுத்தப்படுத்தி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் அதில் பாலை கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர ஆண்மை குறைபாடு நீங்கும்.
உலர்ந்த மகிழம்பூ, கருவேலம்பட்டை, காச்சி கட்டி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இவற்றைத் தண்ணீரில் போட்டுக் கஷாயாமாக செய்து கொள்ளுங்கள். ஆறாத ரணமாகிப் போன புண், காயங்களின் மீது இந்த கஷாயத்தை விட்டு, சுத்தம் செய்து பிறகு மருந்து பூசுங்கள். விரைவில் குணமாகும்.

வாழைப்பூ--மகத்துவம்.!

வாழைப்பூ--மகத்துவம்.!

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

திங்கள், 8 ஜூலை, 2013

ஆண்மை பெருக்கும், அதிக அமில சுரப்பை குறைக்கும் ரோஜா “குல்கந்து

ஆண்மை பெருக்கும், அதிக அமில சுரப்பை குறைக்கும்
 ”ரோஜா “குல்கந்து

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து செய்முறை

நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.

இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

ஜீரணக் கோளாறு நீங்கும்

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

ஆண்மை பெருக்கி

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

இதயத்திற்கு ஏற்றது

ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

குல்கந்தின் பயன்கள்
‌சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.

முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

ஆப்பிள் குல்கந்து மில்ஷேக்

தேவையான பொருட்கள்....

ஆப்பிள் - 1
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 3 1/2 கப்
சுகர் லைட் - 2 டேபிள்
ஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டைத்தூள் - 2 சிட்டிகை

செய்முறை....

• ஆப்பிளை துறுவி சிறிது சர்க்கரை சேர்த்த தண்ணீரில் போடவும். (நிறம் மாறாமல் இருக்கும்)

• பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதோடு மீதி உள்ள சர்க்கரை, குல்கந்து,தேன், பட்டைத்தூள் சேர்த்து அடித்தபின் குளிர்ந்த பால், ஐஸ் துண்டுகள் கலந்து மிக்ஸியில் ஓட விடவும்.

• விருப்பப்ட்டால் சிறிது கடைந்த பாலேடும் சேர்க்கலாம்

• உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

ட்ரைஃப்ரூட் குல்கந்து!

தேவையானவை:

ஆப்பிள் விழுது, கிர்ணிபழ விழுது, முலாம்பழ விழுது - தலா ஒரு கப் (ஆப்பிள், கிர்ணி பழம், முலாம்பழம் ஆகியவற்றைக் கழுவி, தோல் சீவி துண்டுகளாக்கி தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ரோஜாப்பூ - 3 பூக்கள், பாதாம் (தோல் நீக்கி சீவவும்), முந்திரி - தலா 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான தவா வில் ஆப்பிள் விழுது, கிர்ணி பழ விழுது, முலாம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அல்வா பதத்தில் கொதித்து வரும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பிறகு குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, கெட்டியான பதத்தில் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், சுத்தம் செய்து, உதிர்த்த ரோஜா இதழ்கள் சேர்த்து ஒருமுறை கிளறி மூடவும். ஆறியதும் சாப்பிட... சூப்பர் சுவையில் இருக்கும்!

குல்கந்து ரோஸ் குக்கி

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்
ரோஜா குல்கந்து - 4 தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
பால் - 50 மி.லி.,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மைதா, உப்பு, சீரகம், பால், ரோஜா குல்கந்து ஆகியவற்றை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில், எண்ணெயை ஊற்றி, காய வைக்கவும்.

காய்ந்த எண்ணெயில், குக்கி அச்சை நனைத்து, திரும்பவும் எண்ணெயில் முக்கவும். வெந்தவுடன் அச்சு தனியாக வந்து விடும்.

குல்கந்து ரோஸ் குக்கி, எண்ணெயில் தங்கி விடும்.

நன்றாக வெந்தவுடன், எடுத்து விடவும்.

குல்கந்து ரோஸ் குக்கி ரெடி.

குல்கந்து ரோஸ் குக்கியை, தேன், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி கொண்டும், தயார் செய்யலாம்.
 
 

புதன், 3 ஜூலை, 2013

மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்கை வைத்தியம்


*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
...
*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.